Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.
Healthy Food For Weak Child: தற்போதைய வாழ்க்கை முறையில் பலரும் தவறான உணவுப் பழக்கத்தைக் கையாள்கின்றனர். இந்த தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. எனவே, குழந்தையின் ஆரோக்கியமான உணவை பராமரிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.குழந்தைகள் பெரும்பாலும் குப்பை உணவை சாப்பிடுவதையே விரும்புகின்றனர். ஆனால் இது குழந்தையின் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கலாம். இந்த நேரங்களில் சில குழந்தைகள் தங்கள் வயதை ஒப்பிடும் போது, பலவீனமாக இருப்பர். இதில் பலவீனமான குழந்தைகளை ஆரோக்கியமாக்க மாற்ற உணவில் என்ன சேர்க்கலாம் என்பது குறித்து அச்சால்டா, சமூக சுகாதார மையம், மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் கௌரவ் குமார் அவர்கள் சில உணவுகளைப் பகிர்ந்துள்ளார்.
குழந்தைகள் பலவீனமாக இருக்கும் போது உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக மாற்றலாம்.
உலர் பழங்கள்
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிப்பதாக அமைகிறது. மேலும், உலர் பழங்களை சாப்பிடுவது குழந்தையின் எலும்புகளை வலுவாக்குகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உலர் பழங்களை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
பால்
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பால் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் மற்றும் கால்சியம் போன்றவையே காரணமாகும். இதில் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் பெருமளவில் உதவுகிறது.
கோழி
குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அசைவ உணவான கோழி வகை உணவுகளைக் கொடுக்கலாம். இதில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இதை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கலாம். கோழியில் நல்ல அளவிலான இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. அதே சமயம், வறுத்த கோழியைக் குழந்தைக்கு உணவளிக்கக் கூடாது.
முட்டைகள்
குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முட்டை பெரிதும் உதவுகிறது. முட்டையில் புரத்துடன் வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்ட்ச்சத்துக்களைக் குழந்தைகள் பெறலாம். வேக வைத்த முட்டையை உப்பு சேர்த்து அல்லது வேறு சில உணவுகளுடன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். இது அவர்களுக்கு சுவையுடன் கூடிய விருப்பத்தைத் தருகிறது. மேலும் குழந்தைகளுக்கு முட்டையைத் தருவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வாழைப்பழம்
பலவீனமான குழந்தைக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் வாழைப்பழம் அமைகிறது. மேலும் வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் குழந்தை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கவும், எடை அதிகரிப்பதில் பயனுள்ளதாகவும் அமையும். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பின், மசித்த வாழைப்பழங்களை உணவளிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த உணவு பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் மூலம், பலவீனமான குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஆனால், குழந்தைக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருப்பின், அவர்களுக்கு பால் கொடுக்க வேண்டாம் மற்றும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.